4906.

     சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
          சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
     கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
          கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது     அற்புதம்

உரை:

     சிற்பதம் - ஞானபதம். பொற்பதம் - அழகிய பதம். சித்தாடுகின்ற திருநாள் - அரிய ஞானச் செயல்களைப் புரியும் திருநாள். கற்பத நெஞ்சக் கரிசு - கல் போன்ற நெஞ்சின்கண் உள்ள மல அழுக்கு. துறந்தது - நீங்கிற்று. பொய்ந் நூல்கள் - பொய்யான கருத்துக்களை உரைக்கின்ற நூல்கள்.

     (2)