4911. புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
உரை: எம்மைக் கண்டு புறம் பேசிப் பழித்தவரெல்லாம் கீழ்மையுற்று நீங்கிப் போய் மறுபடியும் சபையின் பொற் படியின் கீழ் மீளவும் வந்து பொருந்தி நாங்கள் பாவம் ஆயினவற்றைப் பேசினோம்; இதற்கு என் செய்வோம் என்று கதறி வருந்தித் தெளிவுற்று உன் திருவருள் வாழ்க என்று சொல்லிப் போற்றுவாராயினர். (7)
|