4912. வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது. அற்புதம்
உரை: திருவருளால் எங்களைப் பற்றி இருந்த கொடிய வினைகளாகிய காடுகள் எல்லாம் வேரொடு வெந்தழிந்தன; வெம்மையை யுடைய மாமாயையின் விரிந்த செயல் சுருங்கிக் கெட்டொழிந்தது; மாமாயையின் செயல்கள் தனுகரணம் புவனம் போகங்களாக விரிதலால், அவற்றின் கேட்டை, “விரிவற்று நொந்தது” என்று விளம்புகின்றார். செவ்விய ஞானம் - செம்மையேயாகிய சிவஞானம். கன்ம யோக ஞான சித்திகளும் எளிதில் கைவரப் பெற்றமையின், “சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது” என்று திருவருளின் அற்புதத் தன்மையை (8)
|