4913. சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது
அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே.
உரை: சாதி சமயச் சழக்கு - சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் நிகழுகின்ற பிணக்குகள். மேதினி என்பது மேதி என வந்தது. சாகாத கல்வியை உள்ளத்திற் தோய்வித்தமை புலப்பட, “சாகாத வித்தையைக் கற்றது” என்று சொல்லுகின்றார். கற்பித்தது எனற்பாலது கற்றது என வந்தது. (9)
|