4918. கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி - அம்மா
மாடம் இருந்தத டி. ஆணி
உரை: கூடத்தை கண்ட தலைவி அதன் இயல்பு முற்றும் அறிந்து கொள்ளுதற்கு விரும்பினாளாதலின் அதனை, “கூடத்தை நாட” என்று கூறுகின்றாள். கூடத்தின் இயல்பு அறிய முயன்றவள் அதன் மேல் ஏழு நிலைகளை யுடைய மாடம் விளங்கக் கண்டு, “அக்கூடம் மேல் ஏழ்நிலை மாடம் இருந்ததடி” என்று பாடுகின்றாள். (5)
|