4920. ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
உரை: ஏழ்நிலை மாடங்களும் ஒன்றில் விளங்குகின்ற முத்தும் வெண்மையான பளிங்கு மணியும் நிறம் மாறி அழகிய நீல நிற மாயினமையின் அதனை விளக்குதற்கு, “ஓர் நிலை தன்னில் ஒளிர் முத்து வெண்மணி சீர் நீலம் ஆச்சுதடி” என்று செப்புகின்றார். (7)
|