4924.

     வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
          வெண்மணி ஆச்சுத டி - அம்மா
          வெண்மணி ஆச்சுத டி.                    ஆணி

உரை:

     வேறொரு நிலையில் பவளத்தின் திரண்ட மணி வெண்மையான பளிங்கு மணியாக மாறிற்று என்பாளாய், “பவளத் திரள் வெண்மணி ஆச்சுதடி” என்று விளம்புகின்றாள்.

     (11)