4931. வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றன டி - அம்மா
வல்லபம் பெற்றன டி. ஆணி
உரை: அச்சத்திகள் பலவும் படிப்படியாக ஏறிக் கொண்டிருந்த தலைவியின் அறிவை மயக்கினார்களாக அவள் மயங்காமல் திருவருள் ஆற்றப் பெற்ற சிறப்பை, “அருள் வல்லபம் பெற்றனடி” என்று அறிவிக்கின்றாள். மயக்கினவர்கள் சத்திகளாதலால், “ஆயிரம் சத்திகள் வந்து மயக்க மயங்காமல் நான் அருள் வல்லபம் பெற்றேன்” என்று சொல்லுகின்றாள். பெற்றனனடி என்பது பெற்றனடி எனக் குறுகிற்று. (18)
|