4933. மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேன டி - அம்மா
மற்றது கண்டேன டி. ஆணி
உரை: மணி முடியைக் கண்டவள் அதற்குமேல் ஓர் நெடிய முடி இருப்பது கண்டு வியந்தாளாதலால், “மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது மற்றது கண்டேனடி” என்று கூறுகின்றாள். கொடுமுடி - நெடிதுயர்ந்த முடி. கொடுமை - ஈண்டு வளைவு குறிப்பதன்று. மற்றதும் எனற்பாலது உம்மைத் தொக்கி மற்றது என வந்தது. (20)
|