4937.

     ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
          ஐவண்ணம் ஆகும டி - அம்மா
          ஐவண்ணம் ஆகும டி.                     ஆணி

உரை:

     வண்ணம் - நிறம். வெள்வண்ணம் - வெண்மை நிறம். செவ்வண்ணம் - சிவந்த நிறம். அவர்களிடத்தே பசுமை கருமை நீலம் முதலிய ஐவகை நிறங்கள் தோன்றின என்பதற்கு, “ஆங்கவர் வண்ணம் ஐவண்ணம் ஆகுமடி” என்று கூறுகின்றாள். ஐவண்ணமாவன; பொன்மை, வெண்மை, செம்மை, பசுமை, புகைநிறம்.

     (24)