4938.

     அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
          அப்பாலே சென்றன டி - அம்மா
          அப்பாலே சென்றன டி.                    ஆணி

உரை:

     சத்திகளும் சத்திமான்களும் இவளது வடிவு கண்டு இவள் யாராகும் என்று தம்முள் பேசிக் கொள்ளத் தலைவி அவர் சொற்களைக் கேட்டுக்கொண்டே மேற்சென்றமை புலப்பட, “அங்கவர் எல்லாரும் இங்கு ஆர் இவர் என்னவும் அப்பாலே சென்றேனடி” என்று கூறுகின்றாள்.

     (25)