4941.

     எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
          இருவர் இருந்தார டி - அம்மா
          இருவர் இருந்தார டி.                    ஆணி

உரை:

     அங்கே சத்தி தத்துவம், சிவ தத்துவம், தெய்வ வடிவில் ஆணும் பெண்ணுமாக இருந்தமை விளங்க, “அவ்வாயிலில் பெண்ணோடு ஆணாக இருவர் இருந்தாரடி” என்று கூறுகின்றாள்.

     (28)