4942.

     அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
          அன்பொடு கண்டேன டி - அம்மா
          அன்பொடு கண்டேன டி.                    ஆணி

உரை:

     அணுக்கத் திருவாயில் - சன்னிதி வாயில். மூலட்டானத்துச் சன்னிதியாதலின் அதனை, “அணுக்கத் திருவாயில்” என்று கூறுகின்றாள்.

     (29)