4944.

     அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
          அமுதமும் உண்டேன டி - அம்மா
          அமுதமும் உண்டேன டி.                    ஆணி

உரை:

     அவளுடைய காட்சி அருளின்ப அமுதத்தைத் தனக்கு வழங்கினமை சொல்லுவாளாய், “அவள் அருள் கொண்டேன் அமுதமும் உண்டேனடி” என அறிவிக்கின்றாள்.

     (31)