4949.

     சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
          சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
          சோதியைக் கண்டேன டி.

உரை:

     சாதி சமய உணர்வுகளால் உண்டாகும் பிணக்குகளை, “சாதி சமயச் சழக்கு” என்று கூறுகின்றாள். இதனால், சமரச சன்மார்க்க நெறி பிறந்தமை பெறப்பட்டது. அருட்சோதி - சன்மார்க்க ஞான ஒளி.

     (3)