4950.

     பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
          ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி
          ஐயரைக் கண்டேன டி.

உரை:

     பொய் என்றது பொய்யான நெறிகளை. புறப்பட்டேன் என்பது வெளிப்பட்டேன் என்னும் பொருள் தருவது. அஃதாவது, சாதி சமயச் சங்கற்ப விகற்பங்களைவிட்டு நீங்குதல். மன்றாடும் ஐயர் - அம்பலத்தில் ஆடும் சிவபெருமான். அக்கச்சி - உடன்பிறந்தவர்களில் மூத்த சகோதரியை அக்கா என வழங்கும் சொல் அக்கச்சி என மருவிற்று.

     (4)