4960. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
உரை: ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்; தயவும் அன்பும் நெறியாகக் கொண்டு இனிய அருள் ஞானத்தைப் பெற்றேன்; ஊரமுது - அறுசுவையும் கலந்த உலகியல் உணவு. உலவாமை நல்கும் ஆரமுது - இறவாமையை அளிக்கும் அருமையான ஞான வமுது. (10)
|