கல

கலிவிருத்தம்

4962.

          பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
          பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
          சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
          சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.

உரை:

     பூவாமலே நிதம் காய்த்த சோலையிலும் பூவார் மலர் கொண்டு பந்து ஆடா நின்றேன்; பூத்த மலர்களைக் கொண்டு பந்தாடுகின்றேன்; பந்தே - திருவருள் உருவாகிய பந்தே. சாவா வரம் - இறத்தல் இல்லாத பெருநிலை. திருவருளாகிய பந்தைச் சிவமாக உருவகம் செய்து அதனோடு பேசுகின்றாளாதலின், “சாவா வரம் தந்து வாழ்வாயோ சாவாமல் என்னொடு வீழ்வாயோ” என்று வேண்டுகிறாள்.

     (12)