112. மெய்யருள் வியப்பு

சிந்து

    அஃதாவது, மெய்ம்மையான அருள் ஞானப் பேற்றைப் பல அரிய கனவு நிகழ்ச்சிகளால் வியந்து பாடுவது.

பல்லவி

4963.

     எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
          இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.

உரை:

     பிறருக்கு எய்தும் பொருத்தமோ, மற்றவர்களுக்கு எய்தக் கூடிய பொருத்தமாகுமோ.

     (1)