கண
கண்ணிகள்
4964. தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்றே தே
தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
எனக்கும் உனக்கும்
உரை: உயர்ந்த தம்பம் - உயர்ந்த தூண். தாவிப் போக - தாவி ஏற ஏற. நூலின் தரத்தில் - நூற்கப்படுகின்ற நூல் போல. அதே - அதுவே. கனக்க - தடிப்புறவே. தூக்கி வைத்தாய் - என்னைத் தூக்கி இருக்க வைத்தாய். (2)
|