4966. இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
விண்ணில் உயர்த்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே
எனக்கும் உனக்கும்
உரை: படகில் ஏறியே மயங்க - படகில் ஏறிக்கொண்டு அறிவு மயங்கியபோது. விரவில் - விரைவில். ஒரு கல் மேட்டில் கரையேற்றி அங்கிருந்த வானளாவ உயர்ந்த மாடத்தில் இருக்க வைத்தாய் என்பது கருத்து. (4)
|