4967.

     மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
          மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
     ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
          எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     மேலைப் பால் - மேற்றிசையில் உள்ள. ஏலத் துகிலும் உடம்பும் நனையாது - பொருந்திய உடையும் உடம்பும் நனையாது. என் கரத்தில் பொற்பூன் அணிந்த இறைவன் - என் கைவிரலில் பொன்னாலாகிய மோதிரத்தை அணிந்த இறைவன்.

     (5)