4968. என்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ
எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே.
எனக்கும் உனக்கும்
உரை: என் உடல் ஆவி பொருள் மூன்றும் உனக்கே உரியவை என்பதை இப்பொழுது நான் மீளவும் எடுத்துச்சொல்லவும் வேண்டுமோ. சின்ன வயது - இளமைப் பருவம். சிந்தை என்னை ஆண்ட திறத்தை நினைக்குது; கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குது என இயையும். நினைக்கிறது நனைக்கிறது என்பதை நினைக்குது நனைக்குது என வந்தன. (6)
|