4969.

     அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
          அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
     எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
          எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அணைப்பார் - மெய்யுறத் தழுவி ஆதரிப்பவர். எங்கும் அருள்வார் இல்லை - எவ்வுலகிலும் என்னைக் கண்டு இரங்குபவர் இல்லை. எப்பாலவர்க்கும் நின்னை யன்றி இறைமை இல்லை - எத்தகைய தேவர்களுள்ளும் உன்னைத் தவிர கடவுட் டன்மை யில்லை. உலகில் இச்சை யில்லை - உலகப் பொருள்கள் எவற்றின் மேலும் விருப்பம் இல்லை.

     (7)