4970. அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
எனக்கும் உனக்கும்
உரை: உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குது - உன்னைப் பற்றித் தழுவிக்கொள்ள எனக்குள் ஆசை பெருகுகிறது. அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குது, இன்றில்லையாயினும் என்றேனும் உன்னைப் பற்றித் தழுவி மகிழ்வோம் என்ற உறுதியால் என்னுடைய உயிர் என் உடலில் தங்குகிறது. விரை சேர் பாதம் - தெய்வ மணம் கமழும் திருவடி. உவகை ஆளுதல் - மகிழ்ச்சி மிகுகிறது. (8)
|