4971.

     தனிஎன் மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
          தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
     வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
          மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     ஐந்தொழில் : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். என் உயிரைப் பார்க்க நீ எனக்கு மிகவும் நல்லவன் என இயையும். நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே, நான் செய்த குற்றங்களைக் குறித்து என்னைக் கைவிட மாட்டாய் அன்றோ.

     (9)