4972. என்னைஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே
எனக்கும் உனக்கும்
உரை: என்னை ஆண்ட வண்ணம் - என்னை ஆண்டருளிய தன்மை. மனமும் உயிரும் உடம்பும் உன்ன உன்ன இனிக்குது - என்னுடைய மனமும் உயிரும் உடம்பும் உன்னைப் பன்முறையும் நினைக்க இனிமை மிகுகின்றது. பனித்தல் - நடுங்குதல். (10)
|