4973.

     உன்பேர் அருளை நினைக்குந்தோறும் உடம்பு பொடிக்கு தே
          உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
     அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
          அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     உடம்பு பொடிக்குது - உடம்பு மயிர்க்கூச்செறிகின்றது. காதல் மிகவும் தடிக்குது - காதல் மிகவும் பெருகுகின்றது. அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை - அன்பே அமையும் என்று பாடிய பெரியவர் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய மெய்ம்மொழி.

     (11)