4975.

     உன்னை மறக்கில எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
          உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
     என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
          எந்தாய் நின்னைக் கொடுஓக என்பால் இன்று வருதி யோ.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     பிறர்பால் என்றன் உள்ளம் சூழுமோ - பிற தெய்வங்களிடத்து என் மனம் செல்லாது. சூழுதல் - நினைத்தல். என்னைக் கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ - என்னைக் கொடுக்கவும் வாங்கிக் கொள்ளவும் கூடிய பொருளாக நினைத்தது என்ன காரணம் பற்றியோ.

     (13)