4978.

     யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ
          யானுள் அடுப்பொற் றுணைகட் குவந்து தொழும்புசெய்ய வோ
     ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ
          உடையாய் அவர்க்குள் எனையும்ஒருவன் என்று சொல்லவோ.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அடியவனாகிய என்னை ஆட்கொண்டது யாது நினைந்தோ; ஒருகால் யான் உன் அழகிய திருவடிகள் இரண்டிலும் அன்பு மிகுந்து தொண்டு செய்யவோ; சொல்லப்படுகின்ற கடவுளர் யாவரும் உனக்கு அடிமைகள் அல்லவோ; அவர்களில் ஒருவனாக என்னைச் சொல்லவும் கருதியோ என்பது கருத்து.

     (16)