4981.

     ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
          இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
     மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
          மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     ஏறா நிலை - எத்தகைய பெரியவர்களும் ஏறி அடைய முடியாத சிவயோக நிலை. இறங்காது - இறங்காதவாறு. மாறாக்கருணை - இடையறவு படாத திருவருள். அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ - நின் திருவருளைப் பெறுதற்கு யான் செய்த தவம் முற்பிறவிகளிலோ.

     (19)