4982.

     இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
          எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
     நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
          நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நடமும் நடஞ்செய் இடமும் - திருவருள் கூத்தும் அதனைச் செய்கின்ற ஞான சபையும். நன்று காட்டி - பெரிதும் விளங்கக் காட்டி. வளர்க்கின்றாய் - மேன்மேல் உயரச் செய்கின்றாய். நல்லமுதம் - நல்ல சிவஞானமாகிய அமுதம்.

     (20)