4983.

     விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
          விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
     அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
          அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     விதுவும் கதிரும் - சந்திரனும் சூரியனும். சந்திரன் என்றது துவாத சாந்தத்தில் விளங்கும் அமுத சந்திரனை. சூரியன் என்றது யோகக் காட்சியில் ஒளிரும் ஞானச் சூரியனை. அதுவும் அதுவும் இது என்று உள்ளறிய - விதுவும் கதிருமாகிய அது ஞான நெறியில் தோன்றும் இது.

     (21)