4984.

     இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
          இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
     அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே
          அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     இருளும் ஒளியும் - மலவிருளும் ஞான ஒளியும். அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கி - திருவருளால் இருள் நீக்கி மெய்ப் பொருளால் ஒளி நல்கி மயக்கம் நீக்கி.

     (22)