4985.

     அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
          அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
     பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
          பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே-பெரிய பொருள்களாகிய அண்டங்களில் அகத்திலும் புறத்திலும் உன்றன் அருட் சத்தி இயங்குகிறது. மறைகள் சொல்லுகின்றன என்பது மறைகள் சொல்லுது என வந்தது; பன்மை ஒருமை மயக்கம். பிண்டம் - சிறிய அணுவாகிய பொருள். பெரிய சோதி - அருட்சோதி. அண்டத்தும் பிண்டத்தும் நிறைந்த பெரிய உனது அருட்சோதி சிறியவனாகிய என் அளவில் ஒடுங்கி விளங்குவது என்ன முறையோ அறியேன் என்பது கருத்து.

     (23)