4986.

     கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
          காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
     அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
          ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     கருணாநிதி - கருணையாகிய அருட் செல்வன். உடம்பு பொடிக்குது - உடம்பு மயிர்க் கூச்செறிதல். அருள் நாடகம் செய்பதங்கள் - அருள் கூத்தை ஆடுகின்ற திருவடிகள். ஆடும் பொது - நடனம் புரிகின்ற ஞான சபை.

     (24)