4987. அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
எனக்கு உனக்கும்
உரை: அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்து - திருவருள் சோதியை எனக்கருளிய காலத்தில். இந்த ஞாலம் - இந்த நிலவுலகம். உதவாத் துரும்பு தன்னையோ பொன் என்று அறைய மதிப்பது ஒன்றுக்கும் பற்றாத தும்பைப் பொன் என்று சொல்லுமாறு விளங்கச் செய்வதுபோல எளியவனான என்னைச் சிவஞானி என மதிக்கச் செய்வது முறையோ என்பது கருத்து. (25)
|