4988. எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மை யே
இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
எனக்கும் உனக்கும்
உரை: கலக்கம் தவிர்த்து நன்மை கொடுத்தாய் - உன்னின் வேறாம் என்று நினைத்திருந்த மனக் கலக்கத்தை நீக்கி நன்ஞானத்தை நல்கினாய். தனக்குள்ளது தன் தலைவர்க்கு உள்ளது என்று அறிஞர் சொல்வது, தன் உள்ளத்தில் எழுந்தருளும் பரம்பொருளே தலைவர்களாகிய ஞானிகளின் உள்ளத்தில் உள்ளது என்று அறிஞர் உரைக்கும் அறிவுரை பொருத்தமானது. (26)
|