4989.

     கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் களித்த தே
          கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித் தே
     தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
          தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த நல்ல வே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     கருணைப் பொது - அருளுருவாகிய ஞான சபை. பெரிய சோதித் தரு - பெரிய ஒளியினையுடைய மரமாகிய சிவம். தனித்த கனி - ஒப்பற்ற சிவமாகிய பழம். சிவமாகிய கனியை உண்டு அதன் நலத்தைச் சொல்லவோ எண்ணவோ முடியாதபடி அமைந்தது என்பது கருத்து. தருணம் - சமயம்.

     (27)