4990. என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
எனக்கும் உனக்கும்
உரை: என் ஆருயிர்க்குத் துணைவ - என் அருமையான உயிர்க்குப் பிரியாத் துணைவனான துணைவனே. முன் - முற்பிறப்பில். பொன்னார் புயன் - திருமகள் வீற்றிருக்கும் தோளையுடைய திருமால். அயன் - பிரமன். பொருந்தல் அரியது - உலகத்தவர்கள் நன்கு மதிக்குமாறு அமைதல் அருமையாகும். புலையனேன் எனக்கு கீழ்மகனாகிய எனக்கு. (28)
|