4991. என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
புண்கண் ஒழித்துத் தெள்ளார் அமுதம் புகட்டி என்னை யே
பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர். அன்னை யே.
எனக்கும் உனக்கும்
உரை: என் கண்மணியுள் இருக்கும் தலைவ - என் கண்ணின் மணியுள் விளங்கும் தலைவனே. புன்கண் ஒழித்து - துன்பத்தைப் போக்கி வளர்க்கின்றாய் - ஞானச் சூழலில் இருந்துயரச் செய்கின்றாய். (29)
|