4993.

     ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
          யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
     திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
          சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     யோக நிலை - சி்வஞான சிவயோக நிலை. யோகப் பயன் - சிவயோகத்தால் பெறலாகும் சிவபோகம். தீர்த்த நிலை - மலப்பிணப்பு நீக்கிய நிலை. வேதக் கலை - வேதங்கள் உரைக்கும் ஞானக் கலை.

     (31)