4994. அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டி யே
ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னை யே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னை யே.
எனக்கும் உனக்கும்
உரை: அண்டப் பரப்பின் திறங்கள் - அண்டப் பரப்பில் அடங்கியிருக்கும் உலகுகள். அறிவைத் தூண்டித் தெரித்தாய் - உலகுகள் அத்தனையும் அறிவினால் அறிந்து கொள்ள உதவினாய். அறிந்து கொண்டதை “உலகமெலாம்” என்று மெய்ம்மொழிக்கு வள்ளற் பெருமான் எழுதியருளிய உரையால் அறிந்து கொள்ளலாம். (32)
|