4995.

     வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
          விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
     பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
          பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     விரிவை - விரிந்த செய்திகளை. பயிலும் ஆசை போக - வேதாகமங்கள் புகன்ற விரிவையும் நிலம் முதலிய பூதங்களின் பகுதிகள் முழுதும் இறைவன் அருளால் அறிந்து கொண்டமை வள்ளலார் இதனால் விளக்குகின்றார். பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் - பொய் உரைகளையும் புனைந்துரைகளையும் உண்மை யுணரத் தெரிவித்தாய் என்பது கருத்து.

     (33)