4996. வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
வஞ்சவினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
எனக்கும் உனக்கும்
உரை: வள்ளால் - அருள் வள்ளலாகிய சிவ பரம்பொருளே. வஞ்ச வினைகள் - உண்மை ஞானத்தை உணராவாறு மறைக்கும் வினைகள் தலை வணக்குதே - இ்னி உம்மைத் தொடரேம் என்று சொல்வது போலத் தலைகுனிந்து வணங்கி நீங்குகிறது. எள்ளாது - இகழாமல். நயக்குது - விரும்புகிறது. தயவு - திருவருள். வியக்குது - வியந்து போற்றுகிறது. (34)
|