4997. இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
எனக்கும் உனக்கும்
உரை: மறை வாசகம் - வேதமாகிய திருவாசகம். மதியில் - அறிவில். நான் இனி இறப்பனோ, நான் உலகத்து மக்கள் உடம்பை விட்டு இறப்பதுபோல இறக்க மாட்டேன் என்பது கருத்து. (35)
|