4998. தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
எனக்கும் உனக்கும்
உரை: கருணை யமுதம் - அருள் ஞானமாகிய அமுதம். அருள் ஞானமாகிய நினது அமுதத்தை நீ தந்தருள யான் இத்தலத்தில் என்ன தவம் செய்தேனோ நின் திருவருளால் பெறுதற்கு என இயையும். அலை வாரிதி - அலைகள் பொருந்திய கடல். (36)
|