5001.

     எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்து மதனை யே
          எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
     சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
          தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நுதற் கண் ஈந்து - நெற்றிக் கண்ணைக் கொடுத்து. மதன் - மன்மதன். கொடுத்தாய் அருவ மதனையே - மன்மதனுக்கு அருவுருவம் கொடுத்தாய். உதைப்பித்து - உதைத்து. சிதைவு மாற்றி - இறப்பைத் தவிர்த்து. தேவர் கற்பம் - தேவர்களின் ஆண்டுக் கணக்காகிய கற்ப காலம். காணச் செய்தாய் - நமனை இருக்கச் செய்தாய்.

     (39)