5002. கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
எனக்கும் உனக்கும்
உரை: கள்ளம் அறியேன் - மறைந்திருக்கும் காரணம் அறிகிலேன். நின்னால் கண்ட காட்சி - நினதருள் ஒளியால் கண்ட காட்சி. வேறோர் விடயம் - வேறு என் கண்களால் கண்ட பொருள்கள். அடிமேல் ஆணை - நின் திருவருள் ஆணையாகச் சொல்லுகின்றேன். முன்னையே விளங்கிக் காண்கின்றாய் - முற்பட என் உள்ளத்திலே தோய்ந்து விளக்கமுறப் பார்க்கின்றாய். ஒளிப்பது - மறைப்பது. (40)
|