5003.

     என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்லன் அல்ல னோ
          எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ
     முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே
          மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     என்னை அடிமை கொண்டாய் - என்னை அடிமையாகக் கொண்டு விட்டாய். முன்னை வினைகள் அனைத்தும் - முன் பிறவியில் செய்த வினைகள் யாவற்றையும். மூவர்க்கு அரிய நிலை - அயன் திருமால் உருத்திரன் ஆகிய மூவர்க்கும் எட்டாத உயர் பதம்.

     (41)